மாணவர்களுடன் பாலியல் உறவு!! -அமெரிக்காவில் ஆசிரியைகள் 6 பேர் கைது-

ஆசிரியர் - Editor II
மாணவர்களுடன் பாலியல் உறவு!! -அமெரிக்காவில் ஆசிரியைகள் 6 பேர் கைது-

மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைகள் அடுத்தடுத்து கைது செய்யப்படும் சம்பவங்கள் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்நாட்டின் டான்வில்லி பகுதியை சேர்ந்த எலன்ஷெல் (வயது 38) என்ற பாடசாலை ஆசிரியையான இவர் தனது பாடசாலையில் படிக்கும் 16 வயதுடைய 2 மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். 

இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதைத்தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்தனர். 

இதே போல ஆர்கன்சாஸ் பகுதியை சேர்ந்த ஆசிரியை ஹீதர்ஹேர் (வயது 32) என்பரும் ஒக்லஹோமாவை சேர்ந்த ஆசிரியையான எமிலி ஹான்காக் (வயது 26) என்பவரும் தங்களிடம் படிக்கும் மாணவர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட முறப்பாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வெர்ஜினியாவில் உள்ள ஆசிரியர் ஜேம்ஸ் மேடிசன் லிங்கன் கவுண்டியில் உள்ள ஆசிரியையான டெலானி ஹான்காக். அயோவாவின் டெஸ் மொயின்ஸில் உள்ள பாடசாலையின் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் கிறிஸ்டன் காண்ட் என்ற ஆசிரியர் தங்களிடம் படிக்கும் மாணவியுடன் முறை தவறிய உறவில் ஈடுபட்ட முறைப்பாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதை தவிர பென்சில்வேனியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் பெண் பயிற்சியாளர் ஹன்னா மார்த் என்பவரும் மாணவர் ஒருவருடன் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவில் மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு