த்ரில் வெற்றியுடன் இலங்கைக்கு எதிரான ரி-20 தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

ஆசிரியர் - Editor II
த்ரில் வெற்றியுடன் இலங்கைக்கு எதிரான ரி-20 தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

நியூசிலாந்து - இலங்கை கிரிக்கெட் அணிகள் மோரிய 3 ஆவது மற்றும் இறுதி ரி-20 போட்டி இன்று சனிக்கிழமை குயின்ஸ் டவுனில் நடந்தது. 

நாணய சுழற்ச்சியில் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 182 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

குசல் மென்டிஸ் 48 பந்தில் 73 ஓட்டங்களையும்,  குசல் பெரைரா 33 ஓட்டங்களையும், நிசாங்கா 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டிம் செய்பர்ட் சிறப்பாக விளையாடினார். அவர் 48 பந்தில் 88 ஓட்டங்களை பெற்றார். இதில் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். 

அணித்தலைவர் டாம் லதாம் 31 ஓட்டங்களை எடுத்தார். நியூசிலாந்து வெற்றிக்கு இறுதி பந்துப் பரிமாற்றத்தில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது. குமாரா வீசிய அந்த பந்துப் பரிமாற்றத்தின் முதல் பந்தில் சிக்சர் அடித்து சாப்மேன், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

3 ஆவது பந்தில் ஜேமி நிசமும் (ரன் அவுட்), மிட்செல்லும் கேட்ச்) அவுட் ஆனார்கள். அடுத்த இரண்டு பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது. நியூசிலாந்து 19.5 பந்துப் பரிமாற்றத்தில் 6 இலக்குகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்று த்ரில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட ரி-20 தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு