பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் செல்லும் இ.போ.ச பேருந்து சாரதிகள்/ நடத்துனர்களுக்கு கடும் ஒழுக்காற்று நடவடிக்கை!! மனித உரிமை ஆணைக்குழு தீவிர கண்காணிப்பு...

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் செல்லும் இ.போ.ச பேருந்து சாரதிகள்/ நடத்துனர்களுக்கு கடும் ஒழுக்காற்று நடவடிக்கை!! மனித உரிமை ஆணைக்குழு தீவிர கண்காணிப்பு...

பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாமல் செல்லும் சம்பவங்கள் தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும் அது பின்பற்றப்படவில்லை. எனவே இது குறித்து இனியும் முறைப்பாடுகள் வருமானால் சம்மந்தப்பட்ட பேருந்து குழுவுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இ.போ.ச வடபிராந்திய முகாமையாளர் சகல சாலை முகாமையாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். 

பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதால் வீதியில் நின்று அந்தரிக்கும் மாணவர்கள் என்ற தலைப்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் தனது சொந்த பிரேரணையின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்தது. 

முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளரிடம் விளக்கம் கோரி கடிதம் மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியிருந்நது. அதற்கு இ.போ.ச வட பிராந்திய முகாமையாளர் உரிய நடவடிக்கை எடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா சாலை முகாமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதுடன்,

அதன் பிரதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிரகாரம் கடந்த 2022-11-14 ஆம் திகதி மற்றும் 2022-09-19 திகதிகளில் இ.போ.ச யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மற்றும் வவுனியா ஆகிய சாலைகளின் முகாமையாளர்களிற்கு தெரியப்படுத்தி இருந்தும் 

அவர்கள் தொடர்ந்தும் பாடசாலை மாணவர்களிற்கு முன்னுரிமை வழங்காமை தெரியவருதாகவும் எனவே பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவு நேரங்களில் செயலாற்றும் பேருந்துகள் பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஏற்றியிறக்குமாறு பேருந்து குழுவினருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். 

என மீள அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கும் இடத்து சம்பந்தப்பட்ட பேரூந்து குழுவிற்கு எதிராக சபை விதிமுறைகளின்படி கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளரால் வடமாகாகணத்தில் இயங்கும் சகல சாலை முகாமையாளர்களுக்கும் மீள்  அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு