SuperTopAds

தினம்.. தினம்.. வீதியில் அந்தரிக்கும் பாடசாலை மாணவர்கள்! கண்டு கொள்ளாத கனவான்கள்...

ஆசிரியர் - Editor I
தினம்.. தினம்.. வீதியில் அந்தரிக்கும் பாடசாலை மாணவர்கள்! கண்டு கொள்ளாத கனவான்கள்...

இலங்கை போக்குவரத்துச் சபையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் மாங்குளம் மகா வித்தியாலயத்துக்கு செல்லும் மாணவர்களின் அடிப்படைக் கல்வி உரிமை பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மாங்குளம் மகா வித்தியாலயத்திற்கு செல்லும் மாணவர்கள் பனிக்கர் குளம் பேருந்து நிறுத்தும் இடத்தில் நேற்று திங்கட்கிழமை காலை சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

இவ்வாறு காத்திருந்த மாணவர்கள் அவ் வீதியால் வந்த காரை நகர் சாலைக்கு சொந்தமான பேருந்தை வழிமறித்தபோதும் வேகமாக ஏற்றது சென்றுள்ளது. குறித்த பனிக்கங்குளம் பேருந்து நிறுத்தும் இடத்தில் அதனை ஆண்டிய சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களை சேர்ந்த பல மாணவ மாணவிகள் பேருந்துக்காக வருகை தருகின்றனர். 

பாடசாலை மாணவர்களுக்கு பருவ கால சீட்டை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபை குறித்த ஏ9 வீதியால் செல்லும் பேருந்துகள் மாணவர்களை ஏற்றாது செல்லும் நிலை தொடர்கதையாக உள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் நீண்டதூர பேருந்துகள் தவிர்ந்த ஏனைய பேருந்துகளும் ஏற்றாது செல்வதால் மாணவர்கள் தமது கல்வியை உரிய நேரத்தில் தொடர முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பில் கல்வி அடிப்படை உரிமையாக காணப்படுகின்ற நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாட்டினால் மாணவர்களின் அடிப்படை கல்வி உரிமை பாதிக்கப்படுவதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

குறித்த பாடசாலை மாணவர்களை ஏற்கனவே இலங்கை போக்குவரத்துசபை பேருந்துகள் ஏற்றது செல்லும் செய்திகள் வெளிவந்த நிலையில் அது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது பொறுப்புகளை உரிய முறையில் மேற்கொள்ளாது தட்டிக் கழிப்பது தொடர் கதையாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.