மாம்பழம் பறித்துக் கொண்டிருந்த சிறுவன் சுட்டுக்கொலை!-
உரிமையாளருக்குத் தெரியாமால் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்த சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ககாரியா நகரில் அமைந்துள்ள மாந்தோப்பில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தோப்பின் உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்த போது இனந்தெரியாத மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் தலையில் குண்டு பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
தகவல் அறிந்த பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.