SuperTopAds

அஜித்தின் தந்தை மறைவு!! -நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்-

ஆசிரியர் - Editor II
அஜித்தின் தந்தை மறைவு!! -நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்-

அல்டிமெட் ஸ்டார் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு தளபதி விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ்த் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'AK' என்று அழைக்கப்படும் அல்டிமெட் ஸ்டார் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் காலமானார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அஜித்குமார் தந்தையின் மரணத்திற்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், தளபதி விஜய் அஜித்தின் வீட்டிற்கே சென்று அவரது தந்தைக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர், அஜித்தின் வீட்டிற்கு காரில் செல்லும் வீடியோ மற்றும், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றன.