லொட்டரியில் பெருந்தொகை பணத்தை பரிசாக அள்ளிய குடும்ப பெண்!! -அடுத்த கணம் கணவனை கைவிட்டு செய்த செயல்-

ஆசிரியர் - Editor II
லொட்டரியில் பெருந்தொகை பணத்தை பரிசாக அள்ளிய குடும்ப பெண்!! -அடுத்த கணம் கணவனை கைவிட்டு செய்த செயல்-

தாய்லாந்து நாட்டின் லொட்டரியில் பெரும் தொகை பணத்தை பரிசாக வென்ற பெண் ஒருவர், அலைபேசி அழைப்பில் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துவிட்டு, ரகசிய காதலனுடன் திருமணத்திற்கு தயாரானதாக கூறி, பாதிக்கப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

குறித்த நாட்டின் இசான் பகுதியை சேர்ந்த 47 வயது நரின் என்பவரே 20 ஆண்டுகள் தமது மனைவியாக இருந்த 43 வயது சாவீவன் என்பவர் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அவருக்கு கிடைத்து லொட்டரி பரிசான 300,000 பவுண்டுகள் தொகையில் சரிபாதி தமக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன்வைத்துள்ளார். 

இருப்பினும் பல ஆண்டுகளாக தாங்கள் பிரிந்து செல்லும் முடிவில் தான் இருந்தோம் எனவும், ஏற்கனவே விவாகரத்து தொடர்பில் விவாதித்துள்ளதாகவும் சாவீவன் வாதிட்டுள்ளார்.

நரின் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவும், சம்பவத்தின் போது நரின் தென் கொரியாவில் பணியாற்றி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெப்ரவரி 25 ஆம் திகதி கைபேசியில் தொடர்புகொண்ட சாவீவன், விவாகரத்து தொடர்பில் பேசியதாகவும், ஆனால் லொட்டரியில் பெருந்தொகை பரிசாக வென்றுள்ளதை தம்மிடம் மறைத்ததாகவும் நரின் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தமது மகளிடம் இருந்து சாவீவன் லொட்டரியில் பரிசு வென்ற தகவலை தாம் அறிந்து கொண்டதாகவும் நரின் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 3 ஆம் திகதி நாடு திரும்பிய நரினுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சாவீவன் வீட்டைவிட்டு வெளியேறியதுடன், தமது ரகசிய காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை தாம் சாவீவன் பெயரில் அனுப்பி வந்ததாகவும், தற்போது தமது வங்கிக்கணக்கில் வெறும் 1,434 பவுண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளது எனவும் நரின் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் புதிய சிக்கலாக, நரின் மற்றும் சாவீவன் தம்பதி கடந்த 20 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியிருந்தாலும், இருவரும் முறையாக திருமணம் செய்துகொள்ளவில்லை எனவும், இதனால் திருமண சான்றிதழ் எதுவும் அவர்களிடம் இல்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால் சாவீவன் தெரிவிக்கையில், தாங்கள் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்வது அயலவர்களுக்கு தெரியும் எனவும், இந்த விவகாரத்தில் நரின் இனி தொல்லை தந்தால், அவதூறு புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நரின் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை தொடங்கியுள்ளதாகவே தகவல் வெளியகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு