பிறந்தது பெண் குழந்தை என்பதால் கொலை செய்த கொடூர தாய்

ஆசிரியர் - Editor II
பிறந்தது பெண் குழந்தை என்பதால் கொலை செய்த கொடூர தாய்

இந்தியா நாட்டின் ஒடிசா மாநிலத்தில் தனக்கு பிறந்தது பெண் குழந்தை என தெரிந்ததும் பிறந்த மறுநாளே தாயே கழூத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள கமர்தா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சியாருய் கிராமத்தில் நடந்த இச்சம்பவத்தில் பந்தனா பத்ரா என்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தகவல்களின்படி, குழந்தை காணாமல் போனதை கிராம மக்கள் கவனித்ததை அடுத்து, அவர்கள் பந்தனாவிடம், குழந்தை எங்கே என விசாரித்துள்ளனர். அதற்கு அவர், மார்ச் 5 அன்று குழந்தையை சில வன விலங்குகள் இழுத்துச் சென்றதாக கிராம மக்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, சந்தேகமாடைந்த கிராம மக்கள் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அருகில் உள்ள குளத்திலிருந்து குழந்தையின் உடலை பொலிஸார் மீட்டனர்.

இதையடுத்து, பந்தனாவின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். ஆனால், பந்தனா கைது செய்யப்பட்டு அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜலேஸ்வர்பூர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில், பந்தனா அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு