5 வயது சிறுவனுக்கு 3 மாதங்களாக நிற்காத இருமல்!! -எக்ஸ்ரே எடுத்து பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்-

ஆசிரியர் - Editor II
5 வயது சிறுவனுக்கு 3 மாதங்களாக நிற்காத இருமல்!! -எக்ஸ்ரே எடுத்து பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்-

3 மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் தவித்து வந்த 5 வயது சிறுவனின் நுரையீரலை வைத்தியர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து 3 மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் போனதற்கான அதிர்ச்சியான காரணத்தை வைத்தியர்கள் எக்ஸ்ரே படம் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அதாவது, சிறுவனின் இடது நுரையீரலில் ஸ்பிரிங் போன்ற உலோக பொருள் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.

இடது நுரையீரலில் ஸ்பிரிங் சிக்கிக் கொண்டதை தொடர்ந்து, 2022 டிசம்பர் முதல் சிறுவனுக்கு இடைவிடாத இருமல் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 2023 மார்ச் 8 ஆம் திகதி சிறுவனது இடது நுரையீரலில் இருந்து ஸ்பிரிங் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு