காதலனால் 18 முறை கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண்!! -லண்டன் நகரில் பதறவைத்த சம்பவத்தில் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு-

ஆசிரியர் - Editor II
காதலனால் 18 முறை கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண்!! -லண்டன் நகரில் பதறவைத்த சம்பவத்தில் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு-

கிழக்கு லண்டனில் முன்னாள் காதலியை ஏமாற்றி சந்திக்க வைத்து, கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்ய முயன்ற நபருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது. 

28 வயது ராபின் இப்ராஹிம் என்பவரே 2021 ஜூன் மாதம் தமது முன்னாள் காதலியை தொடர்புகொண்டு, கடனை திருப்பித் தரவேண்டும் என ஏமாற்றி அளித்திருந்தார். இதனை நம்பிய அந்த பெண், ராபின் இப்ராஹிம் சென்றுள்ளார். 

இதன் போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராபின் இப்ராஹிம் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து தரையில் விழுந்து அந்த பெண்ணை ராபின் இப்ராஹிம் 18 முறை கத்தியால் குத்தியுள்ளார். ஆனால், அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு, இந்த தாக்குதலில் இருந்து குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

இதனிடையே, தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர மருத்துவ உதவிக்குழுவினர், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். பொதுமக்கள் உதவியுடன் ராபின் இப்ராஹிம் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த போதும், உரிய சிகிச்சைக்கு பின் குறித்த பெண் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராபின் இப்ராஹிம், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமான நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, பொதுவெளியில் ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தியது, கொலை முயற்சி உள்ளிட்ட உற்றங்களுக்காக 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாசில்டன் கிரவுன் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு