யாழ்.மாநகரசபை இழுபறி! ஈ.பி.டி.பியிடம் மாவை, சுமந்திரன், சிறிதரன், சீ.வி.கே ஆதரவு கோரினார்களாம்..

ஆசிரியர் - Editor I

யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரினாரென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஆதரவு கேட்டு யாழ் மாநகர சபையில் ஆதரவு வழங்கியபோதும் அதன் பின்னர் அதனை மறுத்திருந்தனர்.

கடந்த காலங்களில் யாழ் மாநகர சபை தொடர்பானவிடயங்களில் சீ.வீ.கே.சிவஞானம், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே எம்முடன் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டிருந்தனர்.ஆனால் இம்முறை நடந்த மாநகர முதல்வர் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஆதரவு கோரினார். 

கடந்த கால விடயங்களை கருத்திற்கொண்டு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் ஆதரவு கோரினால் அது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என்றோம். அதற்கு அவர் உடன்படவில்லை. இலங்கை தமிழரசுக்கட்சிஉத்தியோகபூர்வமாக எம்மிடம் கடிதம் மூலம் ஆதரவு கோரினால் அது தொடர்பாக சாதகமாக பரிசீலிக்க முடியும் - என்றார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு