பிரபாசுடன் இணையும் யஷ்!! -உற்சாகத்தில் ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
பிரபாசுடன் இணையும் யஷ்!! -உற்சாகத்தில் ரசிகர்கள்-

கே.ஜி.எப் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அப்படத்தை இலக்கிய  இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

அப்படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

கே.ஜி.எப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சலார் படத்தில் கே.ஜி.எப் பட புகழ் யஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் யஷின் கதாப்பாத்திரம் 7 நிமிடம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு