இளையோர் தேசிய வலைப்பந்து அணிக்கு வீராங்கனைகள் தெரிவு

ஆசிரியர் - Editor II
இளையோர் தேசிய வலைப்பந்து அணிக்கு வீராங்கனைகள் தெரிவு

18 பேர் அடங்கிய இலங்கையின் தேசிய இளையோர் வலைப்பந்து அணிக் குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் ஜூன் மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை 2023 ஆம் ஆண்டுக்கான இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கு இலங்கை வீராங்கனைகளை தயார்படுத்தவே தேசிய இளையோர் வலைப்பந்து அணியானது தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.

தேசிய பயிற்சியாளர் அமால்கா குணத்திலக்க தலைமையில்  தற்போது பயிற்சிகளைப் பெறவுள்ள இந்த தேசிய இளையோர் வலைப்பந்து அணி, ஆசிய சம்பியன்ஷிப் தொடர் நடைபெற சில நாட்களின் முன்னர் 12 பேர் கொண்ட குழாமாக குறைக்கப்பட்டு தென்கொரியா செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் இளம் வீராங்கனைகள் கொண்ட தேசிய அணிக்குழாமானது முன்னாள் தேசிய வலைப்பந்து அணித்தலைவி தமயந்தி ஜயத்திலக்க, திசாங்கனி கொடித்துவக்கு மற்றும் சாமிக்க ஜயசேகர ஆகியோர் கொண்ட குழுவினால் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு