கபில் தேவ் சாதனையை முறியடித்த தமிழக வீரர் அஸ்வின்

ஆசிரியர் - Editor II
கபில் தேவ் சாதனையை முறியடித்த தமிழக வீரர் அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக இலக்குளை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.

அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் 3 ஆவது டெஸ்டில் அவுஸ்ரேலியா அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு தனது சுழல் பந்து வீச்சு மூலம் மிரட்டல் விடுத்த அஸ்வின் 3 இலக்குளை வீழ்த்தியிருந்தார்.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக இலக்குகளை வீழ்த்திய வீரர் என்ற ஒரு புதிய சாதனையை அஸ்வின் நிகழ்த்தியுள்ளார். 

இச் சாதணை பட்டியலில் அனில் கும்ப்ளே 953 இலக்குகளை வீழ்த்தி முதலாம் இடத்திலும், ஹர்பஜன் சிங் 707 இலக்குகளை வீழ்த்தி இரண்டாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு