15 ஆயிரம் ரூபாய்க்காக பெற்ற மகனை வடிவேலுவிடம் விற்ற தாய்! கொடுமையின் உச்சம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 ஆயிரம் ரூபாய்க்காக பெற்ற தாயே 6 வயது மகனை விற்றுள்ள சம்பவம் அத்ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பஞ்சாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காவேரி இவருக்கு கோபால் உள்பட மூன்று குழந்தைகள் உள்ளது.
கோபாலுக்கு வயது 6. சிறு பிள்ளை என்று கூட பாராமல் வறுமையின் காரணமாக, மூன்று பிள்ளைகளையும் வளர்ப்பதில் சிரமப்பட்ட தாய் காவேரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக மன்னன் நகரை அடுத்துள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவரிடம் ரூ.15 ஆயிரத்திற்கு விற்றுள்ளார்.
இந்நிலையில், சிறுவனை விலக்கு வாங்கிய வடிவேலு, அவனை ஆடுமேய்க்க விட்டுள்ளதாக தெரிகிறது. இதைப் பார்த்த அக்கம்பக்கதினர், யார் இந்த சிறுவன் என சந்தேகத்தோடு விசாரிக்கையில் அந்த சிறுவனை எங்கிருந்தோ அழைத்து வந்துள்ளனர் என்பதை புரித்துக்கொண்டு உள்ளனர்
பின்னர் இது குறித்து, குழந்தை பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், சிறுவனை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் ஆடு மேய்க்க வந்துள்ள விவகாரம் தெரிய வந்துள்ளது.
பின்னர் அந்த குழந்தையை மீட்டு தருமபுரியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பத்தில் ஒப்படைக்க அந்த ஆறு வயது குழந்தையை அதிகாரிகள் அழைத்து சென்று உள்ளனர்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தமிழக செய்திகளுக்கு முத்தமிழ் செய்திகளுடன் இணைந்திருங்கள்.