வடக்கின் பொன் அணிகளின் போர் இன்று ஆரம்பம்!! -வலுவான நிலையில் புனித பத்திரிசியார் கல்லூரி-
வடக்கின் பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகள் மோதும் துடுப்பாட்ட போட்டி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இன்று கோலாகலமாக ஆரம்பமான இராண்டு நாட்கள் நடைபெறவுள்ள இத்துடுப்பாட்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி 9 இலக்குகளை இழந்து 272 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதல் இனிங்ஸை இடைநிறுத்தியது.
இதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 22 பந்துப்பரிமாற்றங்களி 2 இலக்குகளை இழந்து 33 ஓட்டங்களை பெற்றபோது முதல்நாள் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
நாளை இரண்டாம்நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.