திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரை!! -விரக்தியில் இளைஞர்களின் விசித்திர செயல்-

ஆசிரியர் - Editor II
திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரை!! -விரக்தியில் இளைஞர்களின் விசித்திர செயல்-

ர்நாடகத்தில் மண்டியா, மைசூரு, கோலார் பகுதிகளில் இளைஞர்கள், பட்டதாரிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் விவசாயம் செய்வதால் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 

மேலும் 30 வயதை கடந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ளனர். தங்களுக்கு விரைவாக திருமணம் நடக்க வேண்டும் என வேண்டி சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூரில் உள்ள பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர். 

இதற்கான முன்பதிவு ஆரம்பமானது.

இதில் மண்டியா மாவட்டம் மட்டுமின்றி சிவமொக்கா, கோலார், பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது

இந்த நிலையில் திட்டமிட்டப்படி திருமணம் ஆகாத இளைஞர்கள் நேற்று மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா பாரதிநகருக்கு வந்தனர். அவர்கள் நேற்று வியாழக்கிழமை காலை பாதயாத்திரை ஆரம்பமானது.

அவர்கள் நடைபாதையாக ஸ்ரீரங்கப்பட்டணா, எச்.டி.கோட்டை வழியாக மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு வழியாக ஹனூருக்கு சென்று மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரா சாமி கோவிலுக்கு செல்கிறார்கள். நேற்று பாதயாத்திரை ஆரம்பித்த இளைஞர்கள், 105 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலை நாளை சனிக்கிழமை சென்றடைகிறார்கள். அங்கு அவர்கள் திருமண வரன் வேண்டி மலை மாதேஸ்வர சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்த உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு