ஜெயலலிதா கொள்ளை அடித்த பணத்தை திருடிவிட்டார் தினகரன்.!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொள்ளையடித்து சேமித்து வைத்திருந்த பணத்தை ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் திருடிவிட்டதாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசி சலசலப்பினை கிளப்பியுள்ளார் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் திகழ்ந்த ஜெயலலிதா அவர்கள் உடல்நலக்குறைவினால் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவினால் காலமானார். அப்போது முதலே அவரது கட்சியினை சார்ந்தவர்கள் ஜெயா உடல்நலக்குறைவு குறித்து பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து மக்களை குழப்பிவந்தனர். அவர்களில் முதன்மையானவர் சீனிவாசன். முதலில் ஜெயா மருத்துவமனையில் நல்ல உடல்நலத்துடன் இருந்தார் என்றும் பின்னர் ஜெயலலிதாவை வேறு எவரையும் சந்திக்கவிடாமல் தடுத்துவிட்டனர் சசிகலா குடும்பத்தினர். சரியான சிகிச்சையும் அளிக்கவில்லை என்றும் அரசியல் நிலைகளுக்கு ஏற்ப பேசி சர்ச்சைகளை கிளப்பிவந்தவர் திண்டுக்கல் சீனிவாசன்.
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற வடிவேலுவின் பழமொழியை மெய்ப்பிக்கும் வண்ணமே இருந்தது அவரது செயற்பாடுகள்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னதாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "ஜெயலலிதா கொள்ளை அடித்து சேமித்து வைத்திருந்த பணத்தை கொண்டே 18 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிட்டார்" என பேசியது கடுமையான சர்ச்சைகளை உண்டாக்கியது.
இது குறித்து விளக்கமளித்துள்ள சீனிவாசன், "நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. என்றைக்கும் அம்மாவின் விசுவாசி நான்" என தெரிவித்துள்ளார்