மயில்சாமி உடல் தகனம் செய்யப்பட்டது
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி (வயது 57) நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்ட மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
மயில்சாமி உடலுக்கு சிவ வாத்தியங்கள் முழங்க கலைஞர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் வழிநேடுக்கிலும் பொதுமக்கள் கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தனர் சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் ஆரம்பித்த இறுதி ஊர்வலம் வடபழனியில் உள்ள ஏ.வி.எம் மயானத்திற்கு சென்றடைந்த பின்னர் மயில்சாமி உடல்லுக்கு அவரது மகன் முறைப்படி இறுதி சடங்கு செய்தார். அதன் பின்னர் அவரது உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.