SuperTopAds

நடுவர் கொடுத்த தவறான முடிவு!! -ஓய்வு அறையில் கோபமடைந்த கோலி-

ஆசிரியர் - Editor II
நடுவர் கொடுத்த தவறான முடிவு!! -ஓய்வு அறையில் கோபமடைந்த கோலி-

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அவுஸ்ரேலியா அணி 263 ஓட்டங்களுக்குள் சகல இலக்குகளையும் இழந்தது. 

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் துடப்பெடுத்தாடிய இந்திய அணி 2 ஆம் நாள் உணவு இடைவேளை வரை 88 ஓட்டங்களுக்கு 4 இலங்குகளை இழந்து தடுமாறியது.

அதனையடுத்து விராட் கோலி - ஜடேஜா ஜோடி நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தது. விராட் கோலி 44 ஓட்டங்களை பெற்றத போது நடுவர் நிதின் மேனனின் சர்ச்சைக்குரிய முடிவால் ஆட்டமிழந்தார்.

மேத்யூ வீசிய 50 ஆவது பந்துப்பரிமாற்றத்தின் 3 ஆவது பந்தில் கோலி எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்த போது இந்த சம்பவம் நடந்தது. 

பந்து பேட் மற்றும் பேடில் ஒரே நேரத்தில் பட்டது. எம்சிசி விதிப்படி பந்து ஒரே நேரத்தில் பேட் மற்றும் பேடில் பட்டால் நாட் அவுட் ஆகும்.

ஆட்டமிழந்து வெளியேறிய கோலி ஓய்வு அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில்  பார்க்கும் போது தான் ஆட்டமிழக்கவில்லை என்பதை அறிந்து கோபத்தை வெளிக்காட்டினார். 

விராட் கோலி சர்ச்சைக்குரிய விதத்தில் வெளியேறுவது இது 3 முறை என்பது குறிப்பிடத்தக்கது.