ஈழத்தமிழர் மீது பற்றுக்கொண்ட நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

ஆசிரியர் - Editor II
ஈழத்தமிழர் மீது பற்றுக்கொண்ட நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

ஈழத்தமிழர் மீது அதீத பற்றுக்கொண்ட தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக் குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

தமிழ் சினிமாவில் பலராலும் நன்கு அறியப்பட்ட குணச்சித்திர நடிகர் மயில்சாமி ( வயது 57) மிமிக்ரி கலைஞராக முதன்முதலில் அறியப்பட்டார்.  

1984 தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் மயில்சாமி, கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன், தனுஷின் உத்தமபுத்திரன் மற்றும் கவலை வேண்டாம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விவேக் உடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் மயில்சாமி தோன்றி அசத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த நிலையில், இன்று அதிகாலை அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது குடும்பத்தினரால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால் வைத்தியசாலைக்கு செல்லும் முன்பே மயில்சாமி உயிரிழந்துவிட்டார், இதனை வைத்தியர்கள் உறுதிப்படுத்திய நிலையில் மயில்சாமியின் இறப்புக்கு தமிழ் திரைத்துறையினர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு