ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுக்கள்!! -கபில்தேவ் சாதனையை முறியடித்தார் தமிழக வீரர் அஸ்வின்-

ஆசிரியர் - Editor II
ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுக்கள்!! -கபில்தேவ் சாதனையை முறியடித்தார் தமிழக வீரர் அஸ்வின்-

அவுஸ்ரேலியா அணிக்கு எதிராக அதிக அதிக இலக்குகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில்

கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார் அஸ்வின்.

இந்தியா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று ஆரம்பமானது. இதில் நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதல் இலக்கிற்கு 50 ஓட்டங்களைப் பெற்ற அந்த அணி சீரான இடைவெளியில் முன்னணி வீரர்களின் இலக்குகளை இழந்து திணறியது. முக்கியமாக அஸ்வின் பந்து வீச்சில் ஒரு பந்துப்பரிமாற்றத்தில் இரு இலக்குகள் வீழ்த்தப்பட்டன.

இப் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெடுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி 2 ஆவது இடத்தை அஸ்வின் பிடித்தார்.

அவுஸ்ரேலியா அணிக்கு எதிராக அஸ்வின் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் இடத்தில் அணில் கும்ளே உள்ளார். இவர் அவுஸ்ரேலியா அணிக்கு எதிராக 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு