தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் வெளியீடு!

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் வெளியீடு!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு யாழ் நாச்சிமார் கோவில் அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் 

கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்தியசீலன் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.

இதன்போது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டு வைத்தார்.  

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சியின் முக்கிய பிரதிகளும் 

வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு