வட கொரியா ஜனாதிபதியின் மகள் பெயரை பொதுமக்கள் வைக்க தடை!! -ஏற்கனவே அந்த பெயரில் உள்ளவர்களை ஓரு வாரத்திற்குள் பெயர்மாற்றம் செய்ய அவசர உத்தரவு-

ஆசிரியர் - Editor II
வட கொரியா ஜனாதிபதியின் மகள் பெயரை பொதுமக்கள் வைக்க தடை!! -ஏற்கனவே அந்த பெயரில் உள்ளவர்களை ஓரு வாரத்திற்குள் பெயர்மாற்றம் செய்ய அவசர உத்தரவு-

உலக நாடுகளில் இல்லாதவாறு வித்தியாசமான உத்தரவுகளை மக்கள் மீது விதித்துவரும் வடகொரியா தற்போது அந்நாட்டு தலைவர்களின் பெயரை இனி அந்நாட்டு மக்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது கிம்மின் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், சிறுமிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வடகொரியா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- கிம் ஜு ஏ என்ற பெயருள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஓரு வாரத்திற்குள் அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிம் தனது குழந்தைகளின் புகைப்படங்களை கடந்த சில ஆண்டுகளாக வெளியிடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சில மாதங்களாக கிம்மின் மகள் கிம் ஜு ஏ பொதுவெளியில் தனது தந்தையுடன் வலம் வருவதை பார்க்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு