தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்

ஆசிரியர் - Editor II
தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்

மிழ் சினிமா துறையில் ரன் படம் மூலம் அறிமுகமாகி தளபதியுடன் புதிய கீதை மட்டுமல்லாமல் ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் மீரா ஜாஸ்மின்.

அவர் தமிழில் இறுதியாக 2014 இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்நிலையில், இன்று புதன்கிழமை பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக 'விமானம்' படக்குழு மீரா ஜாஸ்மினுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படம் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு