இந்திய மத்திய அமைச்சர் மற்றும் ப.ஜ.க மாநில தலைவர் மன்னார் திருக்கேதீஸ்வரத்திற்கு விஜயம்...

ஆசிரியர் - Editor I
இந்திய மத்திய அமைச்சர் மற்றும் ப.ஜ.க மாநில தலைவர் மன்னார் திருக்கேதீஸ்வரத்திற்கு விஜயம்...

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் ப.ஜ.க தமிழக தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் நேற்று காலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்து திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடும் நடத்தியுள்ளனர். 

திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதோடு, இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து மன்னாரில் இலங்கை - இந்திய நட்புறவு நாடுகளின் தூதரக ஏற்பாட்டில் இடம்பெற்ற மன்னார் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான 

உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்விலும் பங்கேற்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு