கிளி. அரச அதிபர் வெற்றிக் கிண்ணம்!! -கரைச்சியை வீழ்த்தி கிண்ணத்தை தட்டித் தூக்கியது பூநகரி பிரதேச செயலக அணி-
கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு இடையில் நடைபெற்ற அரச அதிபர் துடுப்பட்ட வெற்றிக்கிண்ணத்தை பூநகரி பிரதேச செயலக அணி தனதாக்கியது.
குறித்த தொடரின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகனின் பங்குபற்றளுடன் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கரைச்சி பிரதேச செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப் பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 103 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
104 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பூநகரி பிரதேச செயலக அணி 9.3 பந்துப் பரிமாற்றங்களில் 3 இலக்குகளை இழந்து 105 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.