விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! -தளபதி 67 படத்தின் டைட்டில் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது-

ஆசிரியர் - Editor II
விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! -தளபதி 67 படத்தின் டைட்டில் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது-

தளபதி 67 படத்தின் டைட்டில் வீடியோ இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு யூ-டியூப்பில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'தளபதி 67' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. 

அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. 2 ஆம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. இந்நிலையில் 'தளபதி 67' படத்தின் டைட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. 

அதன்படி தளபதி 67 படத்தின் டைட்டில் வீடியோ இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சோனி மியூசிக் இந்தியா யூ-டியூப் சேனலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்டேட்டுகள் குவிந்து வருவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு