இம் முறை அணுகுண்டு வெடியாக இருக்கும்!! -அனிருத் நெகிழ்ச்சி-

ஆசிரியர் - Editor II
இம் முறை அணுகுண்டு வெடியாக இருக்கும்!! -அனிருத் நெகிழ்ச்சி-

வாரிசு படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. 

இதையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி தளபதி 67 படக்குழு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளது. மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில் தளபதி 67 படத்தின் மூலம் மீண்டும் அனிருத், லோகேஷ் கனகராஜ்-தளபதி விஜய் கூட்டணியில் இணைந்தது குறித்து சமூக வலைத்தளத்தில் அனிருத் பதிவிட்டுள்ளார். 

அதில், அன்பான தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் ஒருமுறை இணைவதில் மகிழ்ச்சி. இந்த முறை, இது ஒரு அணுகுண்டு வெடியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு