தமிழரசு கட்சியின் 7 பிரதேசசபை உறுப்பினா்களை பதவி நீக்க கட்சி உயா்மட்டம் தீா்மானம்..
தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய பின்பு கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை மீறிச் செயல்பட்ட 9 உறுப்பினர்களில் 7 பேரை உடனடியாக கட்சியில் இருந்து இடை நிறுத்துவது என நேற்றைய மத்திய செயல்குழுக் கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டம் நேற்றைய தினம் முல்லைத்தீவில் இடம்பெற்றது. இதன்போது மேற்படி விடயமும் ஆராயப்பட்டது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பின்பு கட்சியின் அறிவுறுத்தலை மீறிச் செயல்பட்டதாக 9 உறுப்பினர்கள் இனம் கானப்பட்டனர். குறித்த 9 உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து இடை நிறுத்தி சபை உறுப்பினர்.களில் இருந்து நீக்க வேண்டும்.
என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதில் குச்சவெளி சபையின் இரு உறுப்பினர்களின் தன்மை மாறுபட்டதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இவற்றினை ஆராய்ந்த மத்திய குழு ஏனைய 7 உறுப்பினர்களையும் உடனடியாகவே கட்சியில் இருந்து இடை நிறுத்துவது எனவும் குச்சவெளி சபை இரு உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்து அந்த விசாரணையின் முடிவின் அடிப்படையில் இறுதி முடிவு எட்டுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடுப்படையில் கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்டு அதன் பிரதிகள்தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த 7 உறுப்பினர்.களும் சபை உறுப்பினர் பதவியினை இழப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.