SuperTopAds

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் அக்சர் படேல்

ஆசிரியர் - Editor II
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் அக்சர் படேல்

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை துடுப்பாட்டக்காரர் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு அக்ஷர் படேலின் 29 ஆவது பிறந்தநாளன்று இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து அக்ஷர் படேல் மற்றும் மேகாவிற்கும் திருமணம் நடந்துள்ளது. 

இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியின் போது அக்ஷர் படேல் மேடையில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.