தளபதி 67 குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

ஆசிரியர் - Editor II
தளபதி 67 குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் நடிக்கும் 67 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது. இந்நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் அப்டேட் வருகிற பெப்ரவரி ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய திகதிகளில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு