நியூசிலாந்தின் 41 ஆவது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார்

ஆசிரியர் - Editor II
நியூசிலாந்தின் 41 ஆவது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார்

நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்ததை அடுத்து அந்நாட்டின் நாட்டின் 41 ஆவது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார்.

அந்நாட்டின் தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் ஒக்டோபர் மாதம் முடிய இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார். 

பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகுவதாக அறிவித்தது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதைதொடர்ந்து, அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார். இவர், அடுத்த 9 மாதங்களுக்கு மட்டுமே பதவியில் இருப்பார். 

பின்னர் பிரதமருக்கான தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற பிறகு விழாவில் பேசிய பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறுகையில்;- 

இது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் மற்றும் பொறுப்பு. எதிர்வரும் சவால்களை ஏற்க நான் உற்சாகமாகவும் இருக்கிறேன் என்றார்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு