சபரிமலையில் குவிந்த உண்டியல் காணிக்கை!! -எண்ணி முடிக்க மேலும் 10 நாட்கள் ஆகுமாம்-

ஆசிரியர் - Editor II
சபரிமலையில் குவிந்த உண்டியல் காணிக்கை!! -எண்ணி முடிக்க மேலும் 10 நாட்கள் ஆகுமாம்-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடா வருடம் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 

இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. மண்டல பூஜை ஆரம்பித்த முதல் நாள் முதல் விழா முடியும் இறுதி நாள் வரை தினமும் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை பக்தர்கள் வந்தனர். 

பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கோவில் வருவாயும் அதிகரித்தது. உண்டியல் காணிக்கை, அப்பம், அரவணை விற்பனை மூலம் சுமார் 330 கோடிக்கு வருவாய் கிடைத்தது.

இதில் உண்டியலில் போடப்பட்ட நாணயங்கள் மதிப்பு மட்டும் சேர்க்கப்படவில்லை. அவை முழுமையாக எண்ணப்பட்ட பின் கோவில் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. கோவிலில் உள்ள உண்டியல்களை திறந்து எண்ண தற்போதுள்ள ஊழியர்களால் முடியாது என தெரிவிக்கப்பட்டதால் கூடுதல் ஊழியர்களை நியமித்து கொள்ள கேரள மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

இதையடுத்து கோவில் நிர்வாகம் 479 பணியாளர்களை புதிதாக நியமனம் செய்தது. இவர்களையும் சேர்த்து இப்போது 700 ஊழியர்கள் உண்டியல் நாணயங்களை எண்ணி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு