காதலி அதியா ஷெட்டியை கரம்பிடித்தார் கே.எல்.ராகுல்

ஆசிரியர் - Editor II
காதலி அதியா ஷெட்டியை கரம்பிடித்தார் கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் இந்தி நடிகை அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 

ஆரம்பத்தில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா செல்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த ராகுல் -அதியா ஷெட்டி ஜோடி கடந்த ஆண்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. மகாராஷ்டிராவின் கந்தாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை கே.எல்.ராகுல், அதியா இருவரும் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றி உள்ளனர்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு