இந்திய தமிழகத்தில் இலங்கை தமிழர் மரணம்!! -உறவினர் வீட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்ற போது சம்பவம்-

ஆசிரியர் - Editor II
இந்திய தமிழகத்தில் இலங்கை தமிழர் மரணம்!! -உறவினர் வீட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்ற போது சம்பவம்-

இந்தியாவின் தமிழகத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற இலங்கை தமிழர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த வேல்வரதன் (வயது 45) என்பவர் சுற்றுலா விசாவில் திருச்சி விமானநிலைய பகுதியில் உள்ள தனது உறவினர் வாகீஸ்வரன் (வயது 58) என்பவர் வீட்டுக்கு கடந்த 19 ஆம் திகதி சென்றிருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வேல்வரதன் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகீஸ்வரன் அவரை சிகிச்சைக்காக பஸ்நிலையம் அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் வேல்வரதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து விமானநிலைய பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு