வைத்தியசாலையில் வைத்து கணவனை சுட்டுக் கொன்ற மனைவி!! -காரணத்தை கேட்டு அதிர்ந்து போன பொலிஸார்-

ஆசிரியர் - Editor II
வைத்தியசாலையில் வைத்து கணவனை சுட்டுக் கொன்ற மனைவி!! -காரணத்தை கேட்டு அதிர்ந்து போன பொலிஸார்-

அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் டய்டொனா பீச்சில் உள்ள வைத்தியசாலையில் தீராத நோயினால் போராடி வந்த கணவனை (வயது 77) அவரது மனைவி (வயது 76) துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்ற வந்த வந்த பொலிஸார் அங்கிருந்தவர்களை பாதுகாப்பான  இடத்திற்கு வெளியேற்றினர்.

பின் பொலிஸார் நடத்திய விசாரணையில், நோய்வாய்பட்ட  முதியவர் நீண்ட நாட்களாக வேதனையில் போராடி வந்த நிலையில் வைத்தியசாலையில் தன்னைத்தானே சுட்டுக் கொள்ள முயற்சித்தது தெரியவந்தது.

ஆனால் அது முடியாமல் போனதால், கணவனை மனைவியே சுட்டுக் கொலை செய்துள்ளார். பின் தன்னை தானே சுட்டுக் கொள்ளவும் மனைவி திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து 3 வாரங்களுக்கு முன்பே கணவனும்  மனைவியும் உரையாடல் நடத்தி  இருந்ததும் தற்போது பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கணவனை சுட்டுக் கொன்ற மூதாட்டியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு