மனைவியுடன் கோபம்!! -தனது பிறப்புறுப்பை வெட்டிய கணவன்-

ஆசிரியர் - Editor II
மனைவியுடன் கோபம்!! -தனது பிறப்புறுப்பை வெட்டிய கணவன்-

இந்தியாவின் பீகாரில் வீட்டிற்கு வர மனைவி மீது ஆத்திரமடைந்த கணவன், தனது பிறப்புறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில், மாதேபுரா அருகே உள்ள ரஜினிநாயநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா (வயது 25) என்பவர் 6 வருடங்களுக்கு முன் அனிதா என்பவருடன் திருமணமானது.

இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் என 4 குழந்தைகள் உள்ளன. வெளியூரில் தங்கி வேலை செய்து வரும் கிருஷ்ணா, 2 மாதங்களுக்கு ஒருமுறை குடும்பத்தை சந்திக்க வீட்டுக்கு வருவார். இதனால் அனிதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவார்.

இந்த நிலையில் அண்மையில் கிருஷ்ணா தனது குடும்பத்தை காண வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது தாய் வீட்டிற்கு சென்ற அனிதா வீடு திரும்பவில்லை.

இதனால் அனிதாவை கணவர் கிருஷ்ணா வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் என்ன பிரச்னை என்று தெரியவில்லை, அனிதா வர மறுத்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து அவரை அழைத்த கிருஷ்ணாவை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் மனைவி அனிதா. கிருஷ்ணாவின் குடும்பத்தாரும் அனிதாவை அழைத்துள்ளனர். இருந்தும் அனிதா அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வளவு கூறியும் வராத மனைவி மீது கிருஷ்ணா ஆத்திரமடைந்த கிருஷ்ணா, அந்த கோபத்தை தன் மீதே காட்டிக்கொண்டார். வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு தனது பிறப்புறுப்பை வெட்டியுள்ளார்.

பின்னர், வலி தாங்க முடியாமல் அலறி துடித்த கிருஷ்ணாவை கண்ட உறவினர்கள், மீட்டு அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு