எனக்கு அதற்கு அதிகாரம் இல்லையே..! யாழ்.மாநகரசபை விடயத்தில் ஆளுநர் விளக்கம்..
யாழ்.மாநகர முதல்வர் தொிவு எனது அதிகாரத்திற்குட்பட்ட விடயமல்ல, என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.
வர்த்தமானி அறிவிப்பின் மூலம் மாநகரசபை முதல்வராக இமானுவேல் ஆனல்ட் நியமனம் செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து கூறும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டதாவது,
கடந்த 19ஆம் திகதி யாழ்.மாநகர முதல்வர் தெரிவு இடம்பெறவிருந்த நிலையில் சபையில் கோரம் இருந்ததாக ஒரு பகுதியினரும்,
கோரம் இல்லை என பிறிதொரு பகுதியினரும் கருத்துத் தெரிவித்தமை தொடர்பில் ஊடகங்களில் அவதானித்தேன்.
மாநகர சபையில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் எனக்கு வழங்கப்படவில்லை. மாறாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரையும்,
உள்ளூராட்சி ஆணையாளரை நியமிக்கும் அதிகாரங்கள் என்னிடம் உள்ளது. ஆகவே இலங்கை அரசியல் அமைப்பு
மற்றும் மாநகர கட்டளைச் சட்டங்களுக்கு உட்பட்டு முதல்வர் தெரிவை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கே வழங்கப்பட்டுள்ளது.
இதில் என் பங்கு ஒன்றுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.