யாழ்.மாநகரசபை முதன்மை வேட்பாளராக சட்டத்தரணி சுகாஸ் நியமிக்கப்படாதது ஏன்?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை முதன்மை வேட்பாளராக சட்டத்தரணி சுகாஸ் நியமிக்கப்படாதது ஏன்?

யாழ்.மாநகரசபைக்கு தமிழ் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதன்மை வேட்பாளராக நல்லுார் ஆலய சுற்றாடலில் வசிப்பிடத்தை கொண்ட பிரபல சட்டத்தரணி க.சுகாஸ் நியமிக்கப்படுவார். என எதிர்வுகூறப்பட்டமை பொய்யாகியுள்ளது. 

இந்நிலையில் கட்சி தலைமை சட்டத்தரணி சுகாஸின் பெயரை பிரோிக்க மறுத்துள்ளதாக உள்வீட்டு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.மாநகரசபை முதன்மை வேட்பாளர் யார் என்ற இழுபறி கட்சிக்குள் இருந்ததாகவும் அதில் காண்டீபனா? சுகாஸா? என சர்ச்சை நீடித்துள்ளது.  

எனினும் சுகாஸை முதன்மை வேட்பாளராக நியமிக்ககூடாது என கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்ததாகவும், அததேசமயம் சுகாஸையும், காண்டீபனையும் பகைக்க முடியாத நிலையில் குறைந்தபட்ச வாக்கை கூட பெறமுடியாத தீபல் திலீசன் நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

எனினும் இந்த தீர்மானம் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு