SuperTopAds

வடமாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 17 ஆயிரத்து 555 மாணவர்கள்! மாகாண கல்வி பணிப்பாளர் வாழ்த்து தொிவிப்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 17 ஆயிரத்து 555 மாணவர்கள்! மாகாண கல்வி பணிப்பாளர் வாழ்த்து தொிவிப்பு..

வடமாகாணத்தில் 139 பரீட்சை நிலையங்களில் 17 ஆயிரத்து 55 5 பரீட்சாத்திகள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் குயின்ரேஸ் தெரிவித்தார்.

பாடசாலை கல்வி கட்டமைப்பில் உயரிய பரிசாக கருதப்படும் க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கள்கிழமை ஆரம்பமாக உள்ளது. வடமாகாணத்தில் 15 ஆயிரத்து 156 பாடசாலை பரீட்சாத்திகளும் 2 ஆயிரத்து 399 தனிப்பட்ட பரீசாத்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

மாணவர்களின் தியாகங்கள் பெற்றோர், ஆசிரியர், அதிபர்களின் அர்ப்பணிப்புகளால் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் வெற்றி பெறுவீர்கள் என நம்புகிறேன். கா.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எதிர்வரும் நாட்களில் நிதானமாகவும் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும்.

எவ்வளவு கற்றிருக்கிறோம் என்பது முக்கியமல்ல உரிய நேரத்தில் வினாக்களை விளங்கிக் கொண்டு பதில் எழுதுவதிலே தங்கியுள்ளது. ஆகவே பரீட்சையை எதிர் கொள்ளும் மாணவர்கள் நம்பிக்கையுடன் தோற்றி வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.