யாழ்.மாவட்டம் தவிர்ந்த வடமாகாணத்தின் மற்றய 4 மாவட்டங்களிலும் அதிபர் வெற்றிடம்! யாழ்.மாவட்டத்தில் தேங்கும் அதிபர்கள், மண்டையை சொறியும் மாகாண கல்வி அமைச்சு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் தவிர்ந்த வடமாகாணத்தின் மற்றய 4 மாவட்டங்களிலும் அதிபர் வெற்றிடம்! யாழ்.மாவட்டத்தில் தேங்கும் அதிபர்கள், மண்டையை சொறியும் மாகாண கல்வி அமைச்சு..

யாழ்.மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களையும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் சுமார் 200 மேற்பட்ட அதிபர் வெற்றிடம் நிரப்பப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் வருவதாவது, வடமாகாண கல்வி அமைச்சுக்கு உள்ப்பட்ட யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னர் ,வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனேகமான பாடசாலைகளில் 

நிரந்தர அதிபர் இன்றி பாடசாலைகள் நெருக்கடி நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் ஆசிரியர் நியமனத்திலும் அதிபர் நியமனத்திலும் வெளி மாவட்டங்கள் செல்லாத சுமார் 44 அதிபர்கள் இடமாற்றம் இன்றி தங்கியுள்ளனர்.

அவர்களுக்கான இடமாற்றத்தை வழங்க வடமாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் அரசியல் தலையீடுகள் காரணமாக குறித்த இடமாற்றம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இருந்து 22 அதிபர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டபோதும் அவர்களும் கடமைக்கு செல்லவில்லை. ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் 

உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிபர்கள் அற்ற பாடசாலைகளுக்கு விரைவாக அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு