பிக்பாஸ் பிரபலம் ஜனனிக்கு அடித்த அதிஸ்டம்!! -தளபதி 67 படத்தில் இணைந்தார்-

ஆசிரியர் - Editor II
பிக்பாஸ் பிரபலம் ஜனனிக்கு அடித்த அதிஸ்டம்!! -தளபதி 67 படத்தில் இணைந்தார்-

தளபதி விஜய் நடிக்கும் 67 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் தளபதி விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் 6 ஆவது சீசனில் கலந்து யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட ஜனனி இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இது குறித்து ஜனனியிடம் கேட்டபோது இதை நான் சொல்வதை விட தளபதி 67 படக்குழு சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். காத்திருங்கள் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு