SuperTopAds

2ம் மொழி சிங்கள டிப்ளோமா பூர்த்தி செய்த மாணவர்களை வடமாகாண பாடசாலைகளில் சிங்கள மொழி பயிற்சியாளர்களாக நியமிக்க ஆளுநர் பணிப்பு!

ஆசிரியர் - Editor I
2ம் மொழி சிங்கள டிப்ளோமா பூர்த்தி செய்த மாணவர்களை வடமாகாண பாடசாலைகளில் சிங்கள மொழி பயிற்சியாளர்களாக நியமிக்க ஆளுநர் பணிப்பு!

2ம் மொழி சிங்கள டிப்ளோமா சான்றிதழ் பயிற்சியை நிறைவுசெய்த பதிய மாணவர்கள் ஒருபகுதியினருக்கு வடமாகாண பாடசாலைகளில் ஊதியம் எதுவுமில்லாமல் சிங்கள மொழி பயிற்சியாளர்களாக நியமிக்குமாறு  ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளார்.

இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்டு வருகின்ற இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்து மேலதிக பயிற்சிகளை பெற்ற மாணவர்களே இவ்வாறு பாடசாலைகளில் தற்காலிக பயிற்சியாளர்களாக இணைக்கப்படவுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் இந்து பௌத்த பேரவையில் ஆசிரியராக கடமையாற்றும் ஆசிரியர் சுமெக்சன் கூறுகையில் இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியை சுமார் 23,000 மாணவர்கள் இதுவரை கற்றுள்ளனர்.

அதில் ஒரு பகுதியினருக்கு தற்காலிக பயிற்சியாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.  அதற்கு சந்தர்ப்பம் வழங்கிய இந்து பௌத்த பேரவையின் செயலாளர் இராமச்சந்திரன், ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோருக்கு நன்றி கூறுகிறோம் என்றார்.