தலைவர் உருவாக்கிய தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைத்தவர்களை தமிழ் மக்கள் இனியும் நம்புவார்கள் என்பது பகல் கனவு!

ஆசிரியர் - Editor I
தலைவர் உருவாக்கிய தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைத்தவர்களை தமிழ் மக்கள் இனியும் நம்புவார்கள் என்பது பகல் கனவு!

தலைவர் ஆரம்பித் தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைத்த சுயலாப அரசியல்வாதிகளை தமிழ் மக்கள் இனிமேல் நம்பமாட்டார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் கூறியிருக்கின்றார். 

இன்று நண்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், 

தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்துவிட்ட நிலையில் புதிய கூட்டணி உருவாக்கி சிலர் நாங்கள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு என பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

தலைவர் உருவாக்கிய தமிழ்தேசியக் கூட்டமைப்பு உடைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் முன் பிரச்சாரம் செய்பவர்கள் தமது சுயலாப அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு வருபவர்களின் வாக்குறுதிகளை மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடகிழக்கில் கை சின்னத்தில் தனித்த போட்டியிடுகிறது. 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வரலாற்று ஆதரவை வழங்கி அதி கூடிய வாக்குகளை தந்து என்னை பாராளுமன்றம் அனுப்பினார்கள்.

ஆகவே தேர்தல் ஒன்று நடைபெறுமா என பலருக்கும் கேள்வி இருக்கின்ற நிலையில் அவ்வாறு இடம்பெற்றால் இனியும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு எனக் கூறி மக்களை ஏமாற்ற முடியாது என அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு