மக்கள் நலனா? அப்படி எதுவும் கிடையாது, எல்லாம் வாக்கு அபகரிப்பதற்கான முயற்சி! அமைச்சர் டக்ளஸ்..

ஆசிரியர் - Editor I
மக்கள் நலனா? அப்படி எதுவும் கிடையாது, எல்லாம் வாக்கு அபகரிப்பதற்கான முயற்சி! அமைச்சர் டக்ளஸ்..

தமிழ் கட்சிகளுக்கிடையல் உருவாக்கப்படும் அரசியல் கூட்டுக்கள் மக்களுடைய நலன் சார்ந்தவை அல்ல என கூறியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா, அது வாக்கு அபகரிப்பு முயற்சி என சுட்டிக்காட்டியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டு மக்களின் நலன்சார்தவை அல்ல. வாக்குகளை எவ்வாறு அபகரிப்பது என்பதே அவர்களின் நோக்கமாகும். அங்கு மக்கள் நலன் பின்தள்ளப்படுகிறது.

அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளகின்றன என்றார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு