துணிவை தகர்த்து வாரிசு!! -உலக அளவில் வசூலில் தளபதியின் ஆதிக்கம்-

ஆசிரியர் - Editor II
துணிவை தகர்த்து வாரிசு!! -உலக அளவில் வசூலில் தளபதியின் ஆதிக்கம்-

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தளபதி விஜயின் வாரிசு படமும், அல்டிமெட் ஸ்டார் அஜித்தின் துணிவு படமும் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படங்கள் கடந்த 11 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. துணிவு திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். 

இரு திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் வாரிசு திரைப்படம் 2 நாட்களில் உலக முழுவதும் 80 கோடியும் , துணிவு திரைப்படம் 2 நாட்களில் உலக முழுவதும் 65 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் பொங்கல் விடுமுறை இருப்பதால் இரு படங்களுக்குமே நல்ல வசூல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது வாரிசு இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு