உறவில் ஈடுபட்ட பின் காதலனின் ஆணுறுப்பு மற்றும் தலையை வெட்டி வீசிய காதலி

ஆசிரியர் - Editor II
உறவில் ஈடுபட்ட பின் காதலனின் ஆணுறுப்பு மற்றும் தலையை வெட்டி வீசிய காதலி

அதீத மது போதையில் உடலுறவில் ஈடுபட்ட பின், காதலனின் தலை மற்றும் ஆண் உறுப்பை வெட்டிய பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெய்லர் டெனிஸ் ஷாபிசினஸ் என்ற 25 வயது பெண் கடந்த பெப்ரவரி 2022 இல் போதை தலைக்கு ஏறிய நிலையில் காதலன் ஷாட் தைரியன் (வயது 25) உடன் உடலுறவில் ஈடுபட்ட பின், அவரது தலையை துண்டித்து, பின்னர் அவரது துண்டிக்கப்பட்ட தலை மற்றும் ஆண்குறியை வாளியில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தைரியனின் தாய் விஸ்கான்சினின், கிரீன் பே, ஸ்டோனி புரூக் லேனில் உள்ள அவரது வீட்டில் வாளி ஒன்றில் மகனின் தலையை கண்டு அதிர்ச்சி அடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துளர்.

இதையடுத்து தைரியன் இடத்திற்கு விரைந்த பொலிஸார் வாளி ஒன்றில் துண்டிக்கப்பட்ட தலையும், துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பையும் கண்டுபிடித்தனர்.  

அத்துடன் வீட்டைச் சுற்றி சிதறிக் கிடந்த மற்ற உடல் பாகங்களையும் பார்த்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், பின்னர் ஷாபிசினஸின் வேனில் மனித எச்சங்கள் அடங்கிய சமையல் பாத்திரத்தையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரை கடந்த ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் டெய்லர் டெனிஸ் ஷாபிசினஸின் கொலைக் குற்ற விசாரணை மார்ச் 6, 2023 இல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு