உள்ளாடைகளுடன் ரயிலில் பயணம் செய்த ஆயிரக்கணக்கானோர்!! -லண்டனில் நடந்த பரபரப்பு சம்பவம்-
லண்டன் நகரில் ஒரு பிரிவினர் மேற்கொண்ட ரெயில் பயணம் பார்ப்போரை ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
அதாவது அந்நாட்டில் ஆண், பெண் பேதமின்றி ஆயிரக்கணக்கானோர் ஆடையை கழற்றி விட்டு உள்ளாடையுடன் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
அவர்கள், ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததும் தங்களது கீழ் ஆடையை கழற்றி விட்டு, ரயிலில் ஏறுகின்றனர். எனினும், மேல்பகுதியில் குளிர்கால ஆடைகளுடன் காணப்படுகின்றனர்.
தொப்பி, கையுறை, குல்லா போன்றவற்றை வழக்கம்போல் அணிந்து கொள்கின்றனர். காலணி போன்றவற்றையும் கூட அணிந்து உள்ளனர். அதன்பின் வழக்கம்போல், ரயிலில் அமர்ந்து புத்தகம் படிப்பது, கைபேசியை பார்ப்பது அல்லது இசையை கேட்பதில் அவர்கள் ஆழ்ந்து விடுகின்றனர்.
இந்த வித்தியாச செயலுக்கு என தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. மக்களை சிரிக்க வைக்க வேண்டும், பார்ப்பவர்களை புன்னகைக்க செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.