SuperTopAds

வாரிசு படம் பார்க்க வாருங்கள்!! -அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்த தளபதி ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
வாரிசு படம் பார்க்க வாருங்கள்!! -அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்த தளபதி ரசிகர்கள்-

அல்டிமெட் ஸ்டார் அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று தளபதியின் வாரிசு படம் பார்க்க வருமாறு வெற்றிலை, பழம், பாக்கு வைத்து விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுத்தனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோரின் திரைப்படங்கள் 8 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் வெளியாவதால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜனவரி 13 முதல் 16 ஆம் திகதி வரை திரையரங்குகளில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் ஆச்சரியமான நிகழ்வாக பட்டுக்கோட்டையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. 

அதாவது, பட்டுக்கோட்டையில் அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வாரிசு படம் பார்க்க வருமாறு வெற்றிலை, பழம், பாக்கு வைத்து விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது அனைவருகும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.